ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதிசயங்கள் படைக்கும் ஸ்டெம் கல்வி(STEM-Kalvi) – பூங்கோதை

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதிசயங்கள் படைக்கும் ஸ்டெம் (STEM-Kalvi) தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

தொடர்ச்சியான போராட்ட காலமும், அதனைத் தொடர்ந்து வந்த போரும் அதன் பின்னான காலமும் தமிழ் மக்களைப்  பல தளங்களிலும் மிகவும் பின்னடையப் பண்ணியிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பலமாகத் தாக்கப் பட்ட ஒரு சமூகத்தில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எமது மாணவர்களும் கல்வியும், அவர்கள் எதிர்காலமும்  தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.  கல்வியால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள்  நிச்சயமாகப் பின்தங்கி விடும் என்பதை உலகளாவிய ரீதியில் நாம் காண்கின்ற அனுபவங்கள் பறை சாற்றுகின்றன.

தரமான கல்வி இல்லாத மாணவர்கள்  பிற்காலத்தில் ஆரோக்கியக் குறைபாடுகள், வேலை வாய்ப்பு கிடைக்காமை ,   சம்பாதிப்பதற்கான கணிசமான தடைகளை எதிர் நோக்கல், அவர்களைப் பாதிக்கும் முடிவுகளில்,  பிரதானமாக அரசியல் நெருக்கடிகள் சார்ந்த முடிவுகளைத் தெரிவு செய்ய இயலாமை, அவற்றில்  பங்கேற்க முடியாமை,  இவற்றினால் வாழ்க்கைத் தரம் குறைதல், தங்களுக்கும் தாம் சார்ந்து நிற்கும்  சமூகங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை அடைய முடியாமை போன்ற இன்ன பிற இடர்களை அடைகிறார்கள். 

இந்த வகையில் ஒரு சமூகத்தின் கல்வியை மேம்படுத்தல் என்பது அங்கிருக்கும் மாணவர்கள் தமது எதிர்காலத்தை தமக்கேற்ப தகவமைத்துக் கொள்வதற்கு உதவுவது என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அரசின் கல்வித் திணைக்களம்,  பல தனியார் நிறுவனங்கள், பல  பாடசாலை பழைய  மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள்  தாயகத்தில் கல்விக்காக உழைத்தாலும், சரியான ஒரு கட்டத்தில், வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட இலங்கையில்ப் பரந்து வாழ்கின்ற தமிழ் மாணவர்களின்  கல்வி தொடர்பாக ஆராய்ந்து, குறிப்பிட்ட  பாடங்களில்ப் பின் தங்கியுள்ள மாணவர்  குழுக்களைத் தெரிவு செய்து,  அவர்களது பரீட்சைக்கான பாடங்களில் அவர்களைத்  தேர்ச்சி அடையப்  பயிற்றுவிப்பது மட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான இன்னும் பல தேவைகளையும் தனி ஒருவரின்  உந்துதலால் . ‘ஸ்டெம் கல்வி’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின்’ (STEM-Kalvi) ஊடாக நடைமுறைப் படுத்துவது என்பது முற்றிலும் தனித்துவமான ஒரு செயல்நெறியே.

( இதன் தொடர்ச்சியை கீழே தரப்பட்டுள்ள அபத்தம் பத்திரிக்கையின் இணைப்பைப் பயன்படுத்தி வாசியுங்கள்)

https://www.thayagam.com/apaththam/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *