உயர்தரத்திற்குரிய கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடங்களுக்கு மாத்திரமல்லாமல் 11ம் வகுப்புக்கு கீழான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்குமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவி வருகின்றது. இத்தட்டுப்பாடு தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் மலையக மாவட்டங்களான நுவரேலியா, இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, கேகாலை, மாத்தறை ஆகியவற்றிலும், கிழக்கு மாகாண மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றிலும், வட மாகாணத்தில்
…