STEM-Kalvi நிறுவனத்தால் இலவசமாக நடாத்தப்பட்ட “பாடசாலையை விட்டு வெளியேறியோருக்கான ஆங்கில வகுப்புக்கள்” இவ்வருடம் பெப்பிரவரி மாதத்தில் இருந்து ஏப்பிரல் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளன. இவ்வகுப்புக்களுக்கான விரிவுரைகளை இங்கிலாந்தில் ஆசிரியராக கடமையாற்றும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான Kala Sriranjan அவர்கள் தன்னார்வமாக நடாத்தியிருந்தார்.
மூன்று மாதகாலமாக நடைபெற்ற 24 நிகழ்நிலை ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றி வாராவாரம் இணையவழி பரீட்சைகளிலும், இறுதிப்பரீடசையிலும் ஆர்வமாக தோற்றிய 75 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் STEM-Kalvi சார்பாக பாராட்டுக்கள்.
English For School Leavers-II வகுப்புக்கள் செப்டெம்பர் மாதமளவில் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்.
Leave a Reply