அனைவருக்கும் வணக்கம்.
STEM-Kalvi நிறுவனத்தால் இலவசமாக நடாத்தப்பட்ட “பாடசாலையை விட்டு வெளியேறியோருக்கான ஆங்கில வகுப்புக்கள்” (English For School Leavers-I) இவ்வருடம் பெப்பிரவரி மாதத்தில் இருந்து ஏப்பிரல் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளன. மூன்று மாதகாலமாக நடைபெற்ற 24 நிகழ்நிலை ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றி வாராவாரம் இணையவழி பரீட்சைகளிலும், இறுதிப்பரீடசையிலும் ஆர்வமாக தோற்றிய 75 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் STEM-Kalvi சார்பாக பாராட்டுக்கள்.
எதிர்வரும் புரட்டாதி மாதம் STEM -Kalvi யின் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் (English For School Leavers-II) , இடைநிலை தரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கு அடிப்படை ஆங்கில வகுப்பைப் (basic English Course) பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நேரத்தை மாற்றுவது, உங்களுக்கு அதிக பயன் தருமா அல்லது நீங்கள் வகுப்புகளிற்கு தொடர்ச்சியாக வருவதற்கு கூடுதலாக உதவுமா என அறிவதற்காக, கீழ் தரப்படும் நேரங்களில் உங்களுக்கு வசதியானதைக் இணைக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தின் மூலம் குறிப்பிடுங்கள்.
நேரம்
மாலை 4 – 5:30 மணி
மாலை 6 – 7:30 மணி
மாலை 9 – 11:30 மணி
நாள்
செவ்வாய்க்கிழமை
வியாழக்கிழமை
தொடர்புகளிற்கு: Ms Kala Sriranjan , Dr K Ganesan
e-mail: STEMkalvi@gmail.com
Leave a Reply