இரத்தினபுரி மாவட்ட கபொத(சா/த) பெறுபேறுகள்
எந்தவொரு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் அற்றதும், கபொத(சா/த) இற்கு 37 தமிழ் பாடசாலைகள் உள்ளதுமான,, இரத்தினபுரி மாவட்டத்தை STEM-Kalvi கடந்த வருடம் தத்தெடுத்தது. இம்மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய, இரத்தினபுரி, பலான்கொடை, நிவித்திகலை ஆகிய நான்கு கல்வி வலயங்கள் இருந்தும் உயர்தர வகுப்பில் விஞ்ஞான கற்கை நெறிகளுக்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஒரு பாடசாலை மாத்திரமே உள்ளது மிகவும் கவலைக்குரியது. உயர்தரத்திற்கான புதிய விஞ்ஞான வகுப்புக்களை ஆரம்பிக்க அதிகாரிகள் அனுமதியளிக்க மறுக்கும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. இந்த நிலைமையை மாற்றும் முதற்கட்டமாக கபொத(சா/த) பெறுபேற்றை அதிகரிக்க ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்தோம். 6 பெரிய பாடசாலைகளுக்கு திறன்வகுப்பறை வழங்கினோம். அச்சடிக்கப்பட்ட செயலட்டைகள், மாதிரிப்பரீட்சைகள், விஞ்ஞான, கணித செயலமர்வுகள், இணையவழி வகுப்புக்கள், ஊக்கமளிப்பு கருத்தரங்குகள் (motivational seminars) என்பவற்றின் ஊடாக இம்முறை பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
இப்படியான கடின முயற்சியினூடாக கணித பாடத்திலும், விஞ்ஞான பாடத்திலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கபொத(சா.த) பரீட்சை பெறுபேற்றின்படி கணிதத்துடனான உயர்தரத்திற்கு சித்தியடையும் வீதம் O/L-2021 இல் 42.8% ஆகவிருந்து O/L-2022 இல் 56.5% ஆக உயர்ந்துள்ளது.
உயர்தரத்திற்கு தகுதி பெறும் மொத்த வீதம் 64% ஆக உயர்ந்துள்ளது.
இதற்காக உழைத்த இரவும் பகலும் உழைத்த கல்வியதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
காணொளி: 8/12/2023 அன்று நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகளுடனான 2022-கபொத(சா/த) பெறுபேறுகளின் பின்னான கலந்துரையாடலும் 2023-கபொத(சா/த) இற்கான திட்டமிடலும்.
–Kumaravelu Ganesan, STEM-Kalvi –
Ratnapura District GCE(O/L) Results
Last year, STEM-Kalvi adopted Ratnapura district, which has 37 Tamil schools for GCE(O/L), which does not have any Tamil political representation. It is very worrisome that there is only one recently started school for science curriculum in the GCE(A/L), even though there are 4 education zones in this district. Authorities continue to refuse permission to start new science classes for higher standards. As a first step to change this situation, we prepared a program to increase the efficiency of the public sector. We provided smart classrooms to 6 big schools. We have made a big difference this time through printed worksheets, mock tests, science and math sessions, online classes, and motivational seminars.
Due to such hard work, great progress has been made in mathematics and science subjects.
The pass rate for Advanced Level with Mathematics as per GCE(O/L) results has increased from 42.8% in O/L-2021 to 56.5% in O/L-2022.
The overall rate of qualifying for GCE(A/L) rose to 64%.
Thanks to all the education officers, principals, teachers, well-wishers and donors who worked day and night for this.
Video: 2022-GCE(O/L) Results Discussion with Ratnapura District Schools held on 8/12/2023 and Planning for 2023-GCE(O/L).
–Kumaravelu Ganesan, STEM-Kalvi –
STEM Kalvi Sri Lanka is a transformative initiative dedicated to making a lasting impact in underprivileged regions of Sri Lanka. Through this program, we are tackling the critical shortage of STEM teachers by pioneering a unique approach. By seamlessly integrating video lessons both offline and online, we are breaking down barriers to quality education. Our mission is to empower students with the knowledge and skills that will shape their futures. With STEM Kalvi, we are not just bridging educational gaps, but also fostering a brighter tomorrow for these communities.