SMART CLASSROOMS ( திறன் வகுப்பறை)

🔴மலையகத்தில் சப்பிரகமுவா மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 100க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் உள்ளனவாயினும் உயர்தரத்தில் பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் கற்கை நெறிக்கு ஒரு பாடசாலை தானும் இல்லாத நிலையே உள்ளது. ஒரு சில பாடசாலைகளில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மூடப்படும் நிலையே காணப்படுகின்றது.

 

🔴இந்நிலை தொடருமானால் இம்மாவட்டங்களில் தரம் 6-11 வரையான வகுப்புக்களுக்கு கணிதம் விஞ்ஞானம் கற்பிப்பதற்கே ஆசிரியர்கள் இல்லாத பிரச்சனை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையும். 2022 Dec இல் மேலும் ஒரு தொகை கணித விஞ்ஞான ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதால் இந்நிலை மேலும்ஆர்முடுகலடையும் .

 

🔴இவற்றுக்கான தீர்வுகளில் ஒன்றாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து பாடசாலைகளில் உயர்தரத்தில் பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் கற்கை நெறியை STEM-Kalvi ஆரம்பிக்கவுள்ளோம்.

 

🔴உள்ளூர் ஆசிரியர்கள், வெளியூர் ஆசிரியர்கள், offline video lessons, இணையவழி கற்கை ஆகியவற்றை கலந்து AL-2024 ஐ இலக்கு வைத்து இப்பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

🔴இப்பாடநெறிகளை நடத்துவதற்கான திறன் வகுப்பறைகள் நிர்மாணிக்கும் வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து நடந்து வருகின்றன.


🔴இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விரும்புவோரும், கற்பித்தலில் பங்காளராக விரும்புவோரும் தொடர்பு கொள்ளவும்.

Add Your Heading Text Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *